Home உலகம் ஈரோ 2020 : ஆஸ்திரியா 3 – நோர்த் மாசிடோனியா 1

ஈரோ 2020 : ஆஸ்திரியா 3 – நோர்த் மாசிடோனியா 1

958
0
SHARE
Ad

புச்சாரெஸ்ட் (ரோமானியா) : ஐரோப்பியக் கிண்ணத்திற்கான ஈரோ 2020 காற்பந்து போட்டிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 13) நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் ஆஸ்திரியா – நோர்த் மாசிடோனியா இரண்டு நாடுகளும் பங்கு பெற்றன.

இதில் ஆஸ்திரியா 3 கோல்களை அடித்து வெற்றி பெற்றது. நோர்த் மாசிடோனியா ஒரே ஒரு கோல் மட்டுமே அடித்துத் தோல்வியைத் தழுவியது.

ரோமானியாவின் புச்சாரெஸ்ட் நகரில் இந்த ஆட்டம் நடைபெற்றது.

மற்றைய ஆட்டங்களின் முடிவுகள்

#TamilSchoolmychoice

நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டங்களின் முடிவுகள் பின்வருமாறு:

இங்கிலாந்து 1 – குரோஷியா 0

ஆஸ்திரியா 3 – நோர்த் மாசிடோனியா 1

நெதர்லாந்து 3 – உக்ரேன் 2

ஈரோ 2020 – இன்றைய ஆட்டங்கள்

இன்று திங்கட்கிழமை நடைபெறும் 3 ஆட்டங்கள் பின்வருமாறு:

ஸ்காட்லாந்து – செக் குடியரசு (திங்கட்கிழமை ஜூன் 14 இரவு 9.00 )  ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது.

போலந்து – ஸ்லோவாகியா (திங்கட்கிழமை நள்ளிரவு ஜன் 14 நள்ளிரவு12.00 மணி) ரஷியாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது.

ஸ்பெயின் – சுவீடன் (செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.00 மணி) ஸ்பெயின் நாட்டின் செவில் (Seville) நகரில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது.