Home உலகம் ஈரோ 2020 : இங்கிலாந்து 1 – குரோஷியா 0

ஈரோ 2020 : இங்கிலாந்து 1 – குரோஷியா 0

634
0
SHARE
Ad

இலண்டன் : ஐரோப்பியக் கிண்ணத்திற்கான ஈரோ 2020 காற்பந்து போட்டிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 13) நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தும் குரோஷியாவும் மோதின.

இங்கிலாந்து-குரோஷியா மோதும் ஆட்டம் இலண்டன் வெம்ப்ளி அரங்கில் நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து 1-0 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

#TamilSchoolmychoice

பிரிட்டன் ஒரே நாடாக அரசியல் காரணங்களுக்காக இயங்கி வந்தாலும், காற்பந்து என்று வந்து விட்டால் தனித் தனியாகச்செயல்படும்.  அதற்கேற்ப ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் இங்கிலாந்து ஒரு குழுவாகவும், வேல்ஸ் ஒரு குழுவாகவும், ஸ்காட்லாந்து ஒரு குழுவாகவும் இந்தப் போட்டிகளில் குதித்துள்ளன.

ஈரோ 2020- இங்கிலாந்து குழுவின் நிர்வாகி கேரத் சவுட்கேட்

ஆஸ்திரியா – நோர்த் மாசிடோனியா மோதுகின்றன

அடுத்ததாக இன்று நள்ளிரவு 12.00 மணிக்கு நடைபெறும் இரண்டாவது ஆட்டத்தில் ஆஸ்திரியாவும், நோர்த் மாசிடோனியாவும் மோதுகின்றன.

ரோமானியாவின் புச்சாரெஸ்ட் நகரில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது.

நெதர்லாந்து – உக்ரேன் இடையிலான ஆட்டம்

திங்கட்கிழமை (ஜூன் 14) அதிகாலை 3.00 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் நெதர்லாந்து, உக்ரேன் ஆகிய இருநாடுகளும் களம் காண்கின்றன.

நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது.

எல்லா ஆட்டங்களும் ஆஸ்ட்ரோவில் நேரலையாக ஒளிபரப்பாகின்றன.