Home உலகம் ஈரோ 2020 : நெதர்லாந்து 3 – உக்ரேன் 2

ஈரோ 2020 : நெதர்லாந்து 3 – உக்ரேன் 2

727
0
SHARE
Ad

ஆம்ஸ்டர்டாம் (நெதர்லாந்து) : ஐரோப்பியக் கிண்ணத்திற்கான ஈரோ 2020 காற்பந்து போட்டிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 13) நடைபெற்ற மூன்றாவது ஆட்டத்தில்  நெதர்லாந்து, உக்ரேன் ஆகிய இருநாடுகளும் களம் கண்டன.

இதில் நெதர்லாந்து 3-2 கோல் எண்ணிக்கையில் உக்ரேனை வெற்றி கொண்டது.

திங்கட்கிழமை (ஜூன் 14) அதிகாலை 3.00 மணிக்கு மலேசிய நேரப்படி இந்த ஆட்டம் நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் நடைபெற்றது.

#TamilSchoolmychoice

முதல்பாதி  ஆட்டத்தில் இரண்டு குழுக்களுமே கோல் எதுவும் அடிக்க முடியாமல் திணறின. இருப்பினும் இரண்டாவது பாதி ஆட்டத்தில் நெதர்லாந்து அடுத்தடுத்து இரண்டு கோல்கள் போட, உக்ரேனும் விடாப்பிடியாக, சிறப்பாக விளையாடி இரண்டு கோல்களை அடித்தது.

இரண்டு குழுக்களுமே 2-2 என சமநிலை கண்டிருந்தபோது ஆட்டம் சுமார் 5 நிமிடங்கள் இருக்கும் நிலையில் நெதர்லாந்து மற்றொரு கோலை அடித்து 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

மற்றைய ஆட்டங்களின் முடிவுகள்

நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டங்களின் முடிவுகள் பின்வருமாறு:

இங்கிலாந்து 1 – குரோஷியா 0

ஆஸ்திரியா 3 – நோர்த் மாசிடோனியா 1

நெதர்லாந்து 3 – உக்ரேன் 2

ஈரோ 2020 – இன்றைய ஆட்டங்கள்

இன்று திங்கட்கிழமை நடைபெறும் 3 ஆட்டங்கள் பின்வருமாறு:

ஸ்காட்லாந்து – செக் குடியரசு (திங்கட்கிழமை ஜூன் 14 இரவு 9.00 )  ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது.

போலந்து – ஸ்லோவாகியா (திங்கட்கிழமை நள்ளிரவு ஜன் 14 நள்ளிரவு12.00 மணி) ரஷியாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது.

ஸ்பெயின் – சுவீடன் (செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.00 மணி) ஸ்பெயின் நாட்டின் செவில் (Seville) நகரில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது.