Home நாடு நம்பிக்கை கூட்டணி, அம்னோவுடன் இணைந்து பணியாற்றலாம்

நம்பிக்கை கூட்டணி, அம்னோவுடன் இணைந்து பணியாற்றலாம்

534
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா சானி அப்துல் ஹமீட் எதிர்காலத்தில் நம்பிக்கை கூட்டணி மற்றும் அம்னோ இடையே ஒத்துழைப்புக்கான வாய்ப்பை முன்வைத்துள்ளார்.

அம்னோ தேசிய கூட்டணியில் இருந்து வெளியேறினால், இந்த சாத்தியத்தை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிய ஒன்று என்று அப்துல்லா கூறினார்.

“நாடாளுமன்றம் கூட்டப்பட்ட பின்னர், அடுத்த கட்டம் சட்டபூர்வமான தன்மையை நாடுவது,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

#TamilSchoolmychoice

எனவே, நம்பிக்கை கூட்டணி அம்னோவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருக்கும் என்று காபார் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் கூறினார்.

“இரு கட்சிகளும் கூட்டாக ஓர் அரசாங்கத்தை உருவாக்கலாம் அல்லது இதற்கு முன்னர் பேராக்கில் முன்மொழியப்பட்டது போல,” என்று அவர் கூறினார்.

அம்னோ புதிய அரசாங்கத்தை ஆதரிக்கிறதா அல்லது அதன் ஒரு பகுதியாக இருக்கிறதா என்பது குறித்து தனக்கு கவலையில்லை என்றும், ஜசெகவிற்கும் இதில் எந்த பிரச்சனையும் இருக்காது என்றும் அப்துல்லா கூறினார்.

அம்னோவுடன் இணைந்து பணியாற்ற ஜசெக தயக்கம் காட்டுவதை அடுத்து இந்த அறிக்கையை அவர் வெளியிட்டுள்ளார்.