Home One Line P1 அம்னோ: சாஹிட் ஹமிடி தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும்!

அம்னோ: சாஹிட் ஹமிடி தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும்!

669
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அம்னோ தலைவர் பதவியிலிருந்து அகமட் சாஹிட் ஹமிடி வெளியேற வேண்டும் என்று பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினர் நஸ்ரி அப்துல் அசிஸ் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.

சாஹிட் அம்னோ தலைவராக, தேசிய முன்னணி தலைவராகவும் நீடித்தால், 15-வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று நஸ்ரி எச்சரித்தார்.

கடந்த வாரம் மஇகா பொதுப் பேரவையில் நடந்தது, சாஹிட்டை தேசிய முன்னணி கூறு கட்சிகள் மதிக்கவில்லை என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு என்று அவர் மேற்கோள் காட்டினார்.

#TamilSchoolmychoice

“தேசிய முன்னணி கட்சிகள் அவரை மதிக்கவில்லை. கடந்த வார இறுதியில் மஇகா பொதுப் பேரவையைப் பாருங்கள். அங்கு பிரதமர் மொகிதின் யாசின் பேராளர்களுக்கு உரை நிகழ்த்த அழைக்கப்பட்டார்.

“அம்னோ, தேசிய முன்னணி தலைவரும் வலுவாக இருந்தால், எந்தவொரு கட்சியும் வெளி நபர்களை அழைக்கமாட்டார்கள். இது மிகவும் சங்கடமாக இருக்கிறது. அவர் இருக்கும் வரை, அம்னோ ஒரு தூய்மையான கட்சியாக பார்க்கப்படாது.

“சாஹிட் பதவி விலகினால், கட்சியை யார் வழிநடத்த வேண்டும் என்பதில் இது ஒரு பிரச்சனையை ஏற்படுத்தாது, ஏனென்றால் அம்னோ அடுத்த நிலையில் உள்ளவரை கொண்டு வரும். முகமட் ஹசான் பொறுப்பேற்றார், ” என்று அவர் மேலும் கூறினார்.