Home One Line P1 3.8 பில்லியன் அரசாங்க திட்டங்களை கையகப்படுத்திய கும்பல் கைது

3.8 பில்லியன் அரசாங்க திட்டங்களை கையகப்படுத்திய கும்பல் கைது

630
0
SHARE
Ad

கோலாலம்பூர்: திங்கட்கிழமை (ஏப்ரல் 5) இரவு மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையில் அரசாங்கம் தொடர்பான திட்டங்களின் ஒப்பந்தங்களை கையகப்படுத்திய அதன் சூத்திரதாரி உட்பட ஏழு நபர்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்துள்ளது.

சந்தேக நபர்கள் நாடு முழுவதும் பல அமைச்சகங்கள் மற்றும் அரசு நிறுவனங்களில் இருந்து மொத்தம் 354 ஒப்பந்தங்களை ஏகபோகமாகக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதில் மொத்தம் 3.8 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள திட்டங்கள் அடங்கும்.

இந்தக் கும்பல் 2014 முதல் செயல்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும் 150- க்கும் மேற்பட்ட நிறுவனங்களை பயன்படுத்தி அமைச்சகங்கள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு விலை பட்டியல்களை சமர்ப்பித்ததாக நம்பப்படுகிறது.

#TamilSchoolmychoice

“இக்கும்பலின் தலைவர் 150 வெவ்வேறு நிறுவனங்களை உருவாக்கி, பல நபர்களை நிறுவனங்களின் இயக்குநர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்தக் கும்பல் பராமரிப்பு திட்டங்கள் மற்றும் மேம்பாட்டு திட்டங்களை குறிவைக்கிறது.

“இந்தக் கும்பல் அதன் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நிறுவனங்களைத் திறக்க நூற்றுக்கணக்கான நபர்களின் பெயர்களைப் பயன்படுத்தியது என்பதையும் புலனாய்வு கண்டறிந்துள்ளது. ஒவ்வொரு நபருக்கும் அவர்களின் பெயர் மற்றும் தனிப்பட்ட விவரங்களைப் பயன்படுத்துவதற்கான இழப்பீடாக மாத சம்பளம் மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது,” என்று வட்டாரம் தெரிவித்துள்ளது.