Home One Line P1 போர்ப்ஸ் பட்டியலில் ஞானலிங்கம், டிஐவை நிறுவனர்கள் இடம்பெற்றுள்ளனர்

போர்ப்ஸ் பட்டியலில் ஞானலிங்கம், டிஐவை நிறுவனர்கள் இடம்பெற்றுள்ளனர்

692
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இந்த ஆண்டு உலகப் பணக்காரர்களின் பட்டியலில் நான்கு மலேசிய பிரமுகர்களை, போர்ப்ஸ் முதல் முறையாக தேர்வு செய்துள்ளது.

அவர்களில் இருவர், டான் யூ யே மற்றும் டான் யூ வீ ஆகியோர் சகோதரர்கள். இவர்கள் மிஸ்டர் டிஐவை (Mr. DIY) குழு நிறுவனர்கள் ஆவர். இவர்களுக்கு சொந்தமான சொத்துக்கள் முறையே, 1.8 பில்லியன் அமெரிக்க டாலர் (7.43 பில்லியன் ரிங்கிட் ) மற்றும் 1.1 பில்லியன் அமெரிக்க டாலர் (4.54). பில்லியன் ரிங்கிட்) ஆகும்.

டிஐவை குழும நிறுவனம் கடந்த ஆண்டு அக்டோபர் 30- ஆம் தேதி மலேசியப் பங்கு சந்தையில் (புர்சா மலேசியாவில்) பட்டியலிடப்பட்டது. மேலும் இந்த பங்கு தற்போது அதன் அசல் விலையை விட 245 விழுக்காடு அதிகமாக வர்த்தகம் செய்து வருகிறது.

#TamilSchoolmychoice

முதன்முறையாக பட்டியலிடப்பட்ட மற்றொரு தொழிலதிபர் வெஸ்ட்போர்ட் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் தலைவர் ஜி. ஞானலிங்கம். ஞானலிங்கத்தின் சொத்து 1.7 பில்லியன் அமெரிக்க டாலர் (7.01 பில்லியன் ரிங்கிட்) என மதிப்பிடப்பட்டுள்ளது.

போர்ப்ஸ் பட்டியலிட்ட நான்காவது வணிக நபராக கிரேடெக் டெக்னாலஜி பெர்ஹாட் இணை நிறுவனர் டான் எங் கீ, 1.1 பில்லியன் அமெரிக்க டாலர் (4.54 பில்லியன் ரிங்கிட் ) சொத்து வைத்திருக்கிறார்.

இந்த ஆண்டு மலேசியாவின் மூன்று பணக்கார நபர்களில் கியூக் லெங் சான், ஆனந்த கிருஷ்ணன் மற்றும் தெ ஹாங் பியோ அடங்குவர்.

மொத்தத்தில், இந்த ஆண்டு போர்ப்ஸ் வெளியிட்ட உலகப் பணக்காரர்களின் பட்டியலில் 16 மலேசியர்கள் அல்லது குடும்பங்கள் இடம் பெற்றுள்ளன.