சென்னை : நேற்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 6) நடைபெற்ற தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல்களில் அரசியல்,சினிமாத் துறை பிரபலங்கள் பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு காலை 7.00 மணி முதல் வாக்களித்தனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காலையில் தனது தந்தையாரின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தி விட்டு, பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தி விட்டு வாக்களிப்பு மையம் வந்து வாக்களித்தார்.
அவருடன் அவரின் மனைவியும் மகன் உதயநிதி ஸ்டாலினும் இணைந்து கொண்டனர். அவர்களைப் போன்று மற்ற பிரபலங்கள் சிலர் வாக்களித்த படக் காட்சிகளை இங்கே காணலாம்:

நேற்றைய வாக்களிப்பின்போது அகில இந்திய அளவில் சமூக ஊடகங்களில் பரபரப்பான விவகாரம் நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்துவிட்டு, பின்னர் மோட்டார் சைக்கிளில் பின்இருக்கையில் அமர்ந்து கொண்டு இல்லம் திரும்பிய காட்சிகள்.


