இதில் 2,129 பேர் உள்நாட்டினர் 19 பேர் வெளிநாட்டினிலிருந்து திரும்பியவர்கள் ஆவர். இதைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 367,977 ஆக அதிகரித்துள்ளன.
கடந்த ஒரு நாளில் மட்டும் 1,259 பேர் குணமடைந்து இல்லம் திரும்பியிருக்கின்றனர். தொற்றுகளில் இருந்து குணமாகி இல்லம் திரும்பியவர்களின் எண்ணிக்கை இதுவரையில் 349,039 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 10 பேர் மரணமடைந்ததைத் தொடர்ந்து இதுவரையிலான மரண எண்ணிக்கை 1,363- ஆக உயர்ந்துள்ளது.
மாநிலங்கள் அளவில் மிக அதிகமான சம்பவங்கள் 512 என்ற எண்ணிக்கையில் சரவாக்கில் பதிவாகி உள்ளன. 459 சம்பவங்கள் சிலாங்கூரில் பதிவாகி உள்ளன. கிளந்தானில் 221 புதிய சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.