புது டில்லி: மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகமான கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளதால், அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் இன்று (ஏப்ரல் 22) இரவு 8 மணி முதல் அங்கு புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளன. இவை வரும் மே ஒன்றாம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஊழியர்களின் வருகை 50 விழுக்காட்டிலிருந்து இருந்து 15 விழுக்காடாக குறைக்கப்படுகிறது.
அத்தியாவசிய சேவைகள், செல்லப் பிராணிகள் கடை, தகவல் மையங்கள், எண்ணெய் நிலையங்கள் 50 விழுக்காடு ஊழியர்களுடன் இயக்கப்படும். போக்குவரத்து சேவைகள் 50 விழுக்காடு பயணிகளுடன் இயக்கப்படும்.
இந்த விதிமுறைகளை மீறுவோருக்கு 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.