Home நாடு அவசரநிலை இல்லாமல் இருந்தால் கொவிட்-19 பாதிப்புகள் அதிகரிக்கலாம்

அவசரநிலை இல்லாமல் இருந்தால் கொவிட்-19 பாதிப்புகள் அதிகரிக்கலாம்

573
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அவசரநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க அழைப்பு விடுக்கும் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் உட்பட பிறரை உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடின் விமர்சித்துள்ளார்.

“இவர்களுக்கு புரியவில்லை. அவசரநிலை இல்லையென்றால், கொவிட் -19 சம்பவங்கள் விரைவில் குறைக்க முடியாமல் போகலாம்,” என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு, பல எதிர்க்கட்சித் தலைவர்கள் அரண்மனைக்குச் சென்று மாமன்னருடன் சந்திக்கக் கோரும் மனுவை ஒப்படைத்தனர்.

#TamilSchoolmychoice

இன்று முன்னதாக, அவசரநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரும் மனுவிற்கு மாமன்னர் ஒப்புதல் வழங்கியிருந்தார்.

இந்த மனுவை சமர்ப்பிக்க மகாதீருக்கும், குழுவிற்கும் உரிமை உண்டு என்பதை ஹம்சா மறுக்கவில்லை, ஆனால் தொற்றுநோய் காரணமாக அவசரநிலை அவசியம் என்பதை முன்னாள் பிரதமர் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

“அது (மனு) ஏற்றுக்கொள்ளப்பட்டதா இல்லையா என்பது வேறு விஷயம். என்னைப் பொறுத்தவரை, அவர் இதற்கு முன்னர் பிரதமராக இருந்தார், நாங்கள் செய்த அனைத்தும் மக்களுக்கும் தேசத்துக்கும் தான் என்பதை அவர் அறிவார். அவர் (மகாதீர்) தடுப்பூசி பெற்றுள்ளார்,” என்று அவர் கூறினார்.