Home நாடு மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் 58-வது ஆண்டுக் கூட்டம் – சரவணன் சிறப்புரை

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் 58-வது ஆண்டுக் கூட்டம் – சரவணன் சிறப்புரை

694
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 58-வது ஆண்டுப் பொதுக் கூட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 25-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு மஇகா தலைமையகத்தில் உள்ள நேதாஜி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்த ஆண்டுக் கூட்டத்திற்கு மனித வள அமைச்சரும் மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன்  கலந்து கொண்டு சிறப்புரையாற்றி கூட்டத்தைத் தொடக்கி வைப்பார்.

இந்த ஆண்டுக் கூட்டத்தில் எழுத்தாளர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பிப்பார்கள்.

#TamilSchoolmychoice

ஆண்டுக் கூட்டத்தின் சிறப்பு அங்கமாக தங்க விருதளிப்பு விழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான விருதை எழுத்தாளர்கள் கு.தேவேந்திரன், எல்.எஸ்.மனோகரன், மு.சீரியநாதன், குமாரி கஸ்தூரி ஆகியோர் பெறுகின்றனர்.