Home இந்தியா ஸ்டாலினைச் சந்தித்த கமல்ஹாசன்!

ஸ்டாலினைச் சந்தித்த கமல்ஹாசன்!

973
0
SHARE
Ad

சென்னை : தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல்களில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சற்றும் துவளாமல் அடுத்தடுத்த நாட்களிலேயே தனது அரசியல் பணிகளை தொடக்கி விட்டார்.

ஞாயிற்றுக்கிழமை இரவு (மே 2) அவர் தோல்விடைந்ததாக செய்திகள் வெளியாகின. இருப்பினும் அடுத்த நாள் (மே 3) காலையில் அவர் பொதுமக்களோடு நடைப் பயிற்சி மேற்கொண்ட காட்சிகளை ஒருசிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர்.

அதைத் தொடர்ந்து இன்று செவ்வாய்க்கிழமை (மே 4) அவர் தமிழ் நாடு முதல்வராகப் பதவியேற்கப் போகும் மு.க.ஸ்டாலினை அவரின் இல்லத்திற்கு சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

ஸ்டாலினை அவர் இல்லத்தில் சந்தித்தபோது அங்கு சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உதயநிதி ஸ்டாலினும் உடனிருந்தார்.

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசனுக்கு 51,087 வாக்குகள் கிடைத்தன. பாஜக சார்பில் போட்டியிட்ட வானதி சீனிவாசன் 52,526 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு தொகுதியில் கூட வெற்றி கிடைக்கவில்லை.

கோவை தெற்கு தொகுதி வாக்கு எண்ணிக்கையின்போது வானதி சீனிவாசனுடன் கமல்ஹாசன்…