Home நாடு கொவிட்-19: தீவிர சிகிச்சைப் பிரிவில் 500-க்கும் மேற்பட்டோர்

கொவிட்-19: தீவிர சிகிச்சைப் பிரிவில் 500-க்கும் மேற்பட்டோர்

731
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட் -19 தொடர்பான சுகாதார பிரச்சனை காரணமாக பல்வேறு மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சை பிரிவுகளில் 500- க்கும் மேற்பட்டோர் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கொவிட் -19 பாதிப்பால் நாட்டில் தீவிர சிகிச்சைப் பிரிவில் 506 சம்பவங்கள் நேற்றுடன் சேர்க்கப்பட்டிருப்பது மிக உயர்ந்த எண்ணிக்கையாகும் என்று சுகாதார இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

அந்த எண்ணிக்கையில், 295 சம்பவங்களுக்கு இப்போது சுவாசக் கருவி உதவி தேவை என்றும், இது இதுவரை பதிவு செய்யப்பட்ட மிக அதிக எண்ணிக்கையாகும் என்றும் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

நூர் ஹிஷாம் கருத்துப்படி, நாடு முழுவதும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரண்டு வாரங்களுக்கு முன்பு இருந்ததை விட 44 விழுக்காடு அதிகரித்துள்ளது என்றார்.

மொத்தத்தில், சிலாங்கூர், கோலாலம்பூர், கிளந்தான் மற்றும் சரவாக் ஆகியவை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது அதிகரிப்பு விகிதத்தைக் கொண்டுள்ளன.