Home உலகம் இஸ்ரேல்-ஹாமாஸ் மோதலில் 43 பேர் கொல்லப்பட்டனர்

இஸ்ரேல்-ஹாமாஸ் மோதலில் 43 பேர் கொல்லப்பட்டனர்

855
0
SHARE
Ad
இஸ்ரேலின் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள காவல் நிலையம் ஒன்றுக்கு வருகை தந்த இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாஹூ

ஜெருசலம் : காசா பகுதியில் இஸ்ரேல் பாதுகாப்புப் படையினருக்கும் ஹாமாஸ் பிரிவினருக்கும் இடையில் நடைபெற்று வரும் மோதல்களைத் தொடர்ந்து இதுவரை மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 43-ஆக உயர்ந்துள்ளது.

35 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இஸ்ரேல் பகுதியில்  பேர் கொல்லப்பட்டனர்.

மேலும் 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

#TamilSchoolmychoice

இந்த சம்பவம் தொடர்பில் பிரதமர் மொகிதின் யாசின் தனது கண்டனங்களைத்த தெரிவித்துள்ளார்.

அண்மைய ஆண்டுகளில் நடைபெற்ற மிக மோசமான மோதல்கள் இவை என வர்ணிக்கப்படுகின்றன.

டெல் அவில் மீதும் பீர்ஷெபா மீதும் பாலஸ்தீன போராளிகள் ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டதைத் தொடர்ந்து இன்று புதன்கிழமை (மே 12) அதிகாலையில் இஸ்ரேல் நூற்றுக்கணக்கில் வான்வெளித் தாக்குதல்களை காசா பகுதியில் நடத்தினர்.

ஹாமாஸ் மையங்களையும் அவர்களின் ஏவுகணைத் தாக்குதல் முனைகளையும் குறிவைத்துத் தாங்கள் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் கூறியிருக்கிறது.

திங்கட்கிழமை தொடங்கி 1000-க்கும் மேற்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களை ஹாமாஸ் பிரிவினர் நடத்தினர் என்றும் இஸ்ரேல் குற்றம் சாட்டியது.