Home நாடு கொவிட்-19 : மரண எண்ணிக்கை 47 ஆக உயர்வு – புதிய தொற்றுகள் 4,865

கொவிட்-19 : மரண எண்ணிக்கை 47 ஆக உயர்வு – புதிய தொற்றுகள் 4,865

906
0
SHARE
Ad

noor-hisham-health-min-07072020கோலாலம்பூர் : இன்று திங்கட்கிழமை (மே 18) வரையிலான ஒருநாளில்  கொவிட் தொற்றுகளின் காரணமாக நிகழ்ந்த மரணங்களின் 47 ஆக அதிகரித்திருக்கிறது. கொவிட் தொற்றுகளால் ஏற்பட்ட மிக அதிகமான ஒருநாள் மரணங்களாக இந்த எண்ணிக்கை திகழ்கிறது.

இன்றைய மரண எண்ணிக்கையைத் தொடர்ந்து இதுவரையிலான மரணங்களின் எண்ணிக்கை 1,994 ஆக உயர்ந்திருக்கிறது.

புதிய தொற்றுகளின் எண்ணிக்கை ஒருநாளில் 4,865 ஆக மீண்டும் உயர்ந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து  நாட்டில் இதுவரையில் பதிவான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 479,421 ஆக உயர்ந்திருக்கிறது.

#TamilSchoolmychoice

தொற்றுகளில் இருந்து குணமடைந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 3,497 ஆக இருந்தது. இதைத் தொடர்ந்து இதுவரையில் கொவிட் தொற்றுகளில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 432,600 ஆக உயர்ந்தது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 44,827 ஆக உயர்ந்த நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 531 ஆகும். இவர்களில் 277 பேர் சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாநிலங்கள் ரீதியாக மிக அதிகமான தொற்றுகளைக் கொண்ட மாநிலமாக சிலாங்கூர் 1,743 தொற்றுகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது.

512 தொற்றுகளுடன் சரவாக் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. மற்ற மாநிலங்கள் வாரியான தொற்றுகளின் எண்ணிக்கையை மேற்காணும் வரைபடத்தில் காணலாம்.

கோலாலம்பூரில் மட்டும் 477 தொற்றுகள் பதிவாகி இருக்கின்றன. இன்றைய மொத்த ஒருநாள் தொற்றுகளில் ஏறத்தாழ பாதி தொற்றுகள் சிலாங்கூர், கோலாலம்பூர் மாநிலங்களில் பதிவானவை ஆகும்.