Home நாடு “என்னைப் பழி தீர்க்கும் நடவடிக்கை” – வருமானவரி வழக்கு குறித்து ஷாபி அப்துல்லா

“என்னைப் பழி தீர்க்கும் நடவடிக்கை” – வருமானவரி வழக்கு குறித்து ஷாபி அப்துல்லா

672
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : தனக்கு எதிராக உள்நாட்டு வருமான வரி இலாகா தொடுத்திருக்கும் வழக்கு தன்னை அரசியல் ரீதியாகப் பழிவாங்கும் நடவடிக்கை என வழக்கறிஞர் டான்ஸ்ரீ ஷாபி அப்துல்லா தெரிவித்திருக்கிறார்.

நஜிப் மீதான எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் மேல்முறையீட்டு வழக்கில் வாதாட மேல்முறையீட்டு நீதிமன்றம் வந்திருந்த முகமட் ஷாபி அப்துல்லாவிடம் பத்திரிகையாளர்கள் அணுகி விவரம் கேட்டபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இன்று (மே 18) வரையில் தன் மீதான வழக்கு ஆவணங்கள் சார்வு செய்யப்படவில்லை என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.

#TamilSchoolmychoice

முன்னாள் பிரதமர் நஜிப் தொடர்பான பல வழக்குகளில் அவரைப் பிரதிநிதிக்கும் பிரபல வழக்கறிஞர் டான்ஸ்ரீ முகமட் ஷாபி அப்துல்லா 9.41 மில்லியன் ரிங்கிட் வருமான வரி பாக்கியைச் செலுத்த வேண்டும் என மலேசிய அரசாங்கம் அவர் மீது வழக்கு தொடுத்துள்ளது.

உள்நாட்டு வருமானவரி இலாகா மலேசிய அரசாங்கத்தின் சார்பில் இந்த வழக்கை நீதிமன்றத்தில் தொடுத்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளாக அவர் செலுத்தாக வருமான வரி பாக்கிக்காக இந்த வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது.

கடந்த மே 6-ஆம் தேதி இந்த வழக்கு நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எதிர்வரும் ஜூன் 8-ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வரவிருக்கிறது.

ஷாபி அப்துல்லா மொத்தம் செலுத்த வேண்டிய வருமானவரி பாக்கித்தொகை 9,414,708.32 என்றும் வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் இதற்கான வழக்கு ஆவணங்கள் தங்களின் மீது இதுவரையில் சார்வு செய்யப்படவில்லை என ஷாபி அப்துல்லா சார்பில் அவரின் மகனுமான வழக்கறிஞர் முகமட் பார்ஹான் ஷாபி அப்துல்லா நேற்று திங்கட்கிழமை (மே 17) தெரிவித்திருந்தார்.

நஜிப் மீதான எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் மேல்முறையீட்டு வழக்கில் வாதாட வந்திருந்த முகமட் ஷாபி அப்துல்லாவிடம் பத்திரிகையாளர்கள் அணுகி விவரம் கேட்டபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.