கொவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க யுஐடிஎம் மருத்துவமனையை பயன்படுத்துவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கை எதிர்வரும் வாரங்களில் அதிகமான நோயாளிகளை பதிவு செய்யும் என்பதால் எடுக்கப்பட்டுள்ளது.
கொவிட் -19 காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருவதால் சுங்கை பூலோ மருத்துவமனையின் தடயவியல் துறைக்கு உடல்களை சேமிக்க அதிக இடம் தேவை என்று ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது.
இந்த வார தொடக்கத்தில், மருத்துவமனையில் ஒரு சிறப்பு கொள்கலன் நிறுவப்பட்டது. இது அதிகபட்சமாக 20 உடல்களை சேமிக்கும் திறன் கொண்டது.
“அதிகமான இறப்புகளுக்கான தயார் நிலையில் மருத்துவமனைக்கு மற்றொரு சிறப்புக் கொள்கலன் கிடைக்கிறது,” என்று பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி கூறினார்.