Home நாடு சிவபாலனின் மரணம் குறித்து விசாரிக்க சிறப்புக் குழு அமைக்க வேண்டும்

சிவபாலனின் மரணம் குறித்து விசாரிக்க சிறப்புக் குழு அமைக்க வேண்டும்

520
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன்: தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த போது மாரடைப்பு வந்து காலமானதாகக் கூறப்படும் சிவபாலனின் மரணம் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி கேட்டுக் கொண்டார்.

“காவல்துறையினர் சட்டத்தின் எல்லைக்குள் செயல்படுவதை உறுதிப்படுத்த ஒரு சிறப்பு குழு அமைப்பு தேவை. காவல் துறையினர் எல்லா வகையான சாக்குகளையும் கொடுக்கக்கூடும், ஆனால் தங்களது காவலில் இறக்கும் கைதிகள் மரணமடைந்தால் அது காவல்துறையினர் பொறுப்பேற்க வேண்டும் என்பதே உண்மை,” என்று அவர் கூறினார்.

அண்மையில் தடுப்புக் காவலில் மரணமுற்ற கணபதியும் சிவபாலனும் தடுப்புக் காவலில் இறக்கும் கடைசி நபர்களாக இருக்கப்போவதில்லை என்றும் இராமசாமி கூறினார்.

#TamilSchoolmychoice

சிவபாலன் மே 20 அன்று கைது செய்யப்பட்டு காலை 11.20 மணிக்கு கோம்பாக் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.

முன்னதாக மிரட்டி பணம் பறித்த வழக்கில் சிவபாலன் கைது செய்யப்பட்டார். மூச்சுத்திணறல் சிக்கல்களை சந்தித்த பின்னர், மதியம் 12.20 மணியளவில் சிவபாலன் காலமானார். அவரது மரணம், மாரடைப்பால் ஏற்பட்டது என்று காவல் துறை நேற்று தெரிவித்தது.