கூச்சிங்: சரவாக் மற்றும் சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிலைமை இன்று காலை மோசமடைந்துள்ளது. இரு மாநிலங்களைச் சேர்ந்த 5,148 பேர் வெளியேற்றப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
சபாவில், வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,722 ஆக உயர்ந்துள்ளது.
சபா மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவின் (ஜேபிபிஎன்) அறிக்கையின்படி, தெனோமில் 4,147 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்றும் அதுவே மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டமாக இருப்பதாகக் கூறியது.
பியூபோர்டில் உள்ள மூன்று நிவாரண மையங்களுக்கு வெளியேற்றப்பட்ட பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 575 ஆக உயர்ந்துள்ளது.
சரவாக்கில், லிம்பாங் மற்றும் லாவாஸ் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 98 குடும்பங்களில் இருந்து 426 ஆக அதிகரித்துள்ளது.
சரவாக் ஜேபிபிஎன் செயலகத்தின்படி, மேலும் இரண்டு நிவாரண மையங்கள் நேற்று திறக்கப்பட்டுள்ளன.