Home வணிகம்/தொழில் நுட்பம் ஜெப் பெசோஸ் பதவி விலகுகிறார்

ஜெப் பெசோஸ் பதவி விலகுகிறார்

984
0
SHARE
Ad

நியூயார்க் : அமேசோன் நிறுவனத்தைத் தோற்றுவித்தவரான ஜெப் பெசோஸ் தனது தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பிலிருந்து எதிர்வரும் ஜூலை 5-ஆம் தேதி பதவி விலகப் போவதாக அறிவித்துள்ளார்.

புதன்கிழமையன்று (மே 26) நடைபெற்ற அமேசோனின் பங்குதாரர்களுக்கான ஆண்டுக் கூட்டத்தில் கலந்து கொண்டபோது ஜெப் பெசோஸ் இந்தத் தகவலை வெளியிட்டார்.

கடந்த 30 ஆண்டுகளாக ஜெப் பெசோஸ்  அமேசோன் நிறுவனத்தை நிருவாக ரீதியாக வழிநடத்தி உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக உருவாக்கினார். அதன்வழி உலகப் பணக்காரர்களில் ஒருவராகவும் திகழ்கிறார்.

#TamilSchoolmychoice

ஜெப் பெசோசுக்குப் பதிலாக அண்டி ஜாஸ்ஸி தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பை ஏற்கவிருக்கிறார். தற்போது அவர் அமேசோன் வலைத்தள சேவைகளுக்குப் பொறுப்பேற்றிருக்கிறார்.

இனி ஜெப் பெசோஸ் அமேசோன் நிறுவனத்தின் நிருவாகத் தலைவர் பொறுப்பை வகிப்பார்.

ஜெப் பெசோஸ் பதவி விலக நிர்ணயித்துள்ள அதே ஜூலை 5-ஆம் தேதியில்தான் 1994-ஆம் ஆண்டில் அமேசோன் நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது.

“எனது புதிய பதவியான நிருவாகத் தலைவர் பதவியை ஏற்க பெரும் ஆர்வத்துடன் உள்ளேன். இனி எனது ஆற்றலையும் கவனத்தையும் புதிய தொழில்நுட்ப உருவாக்கங்கள், புதிதாகத் தொடங்கப்படும் புத்தாக்கத் திட்டங்களின் பக்கம் திசை திருப்பவிருக்கிறேன்” எனவும் ஜெப் பெசோஸ்  தெரிவித்திருக்கிறார்.

அமேசோன் தவிர்த்து வேறு சில புதிய திட்டங்களிலும் ஜெப் பெசோஸ்  முதலீடு செய்திருக்கிறார். அந்தத்திட்டங்களில் இனி அவர் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.