Home நாடு கேன்சினோ, ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிகளுக்கு நிபந்தனையுடன் அனுமதி

கேன்சினோ, ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிகளுக்கு நிபந்தனையுடன் அனுமதி

484
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சீனாவின் கேன்சினோ பயோலாஜிக்ஸ் மற்றும் அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சனின் கொவிட் -19 தடுப்பூசிகள், மலேசியாவில் பயன்படுத்த நிபந்தனை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன என்று சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

போதைப்பொருள் கட்டுப்பாட்டு ஆணையம் (டி.சி.ஏ) இன்று தனது சந்திப்புக் கூட்டத்தில், பிபைசர்-பயோஎன்டெக்கின் கொவிட் -19 தடுப்பூசியை நாட்டில் 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது.

“டி.சி.ஏ தனது 359- வது கூட்டத்தை இன்று நடத்தியது. ஒரு முறை மட்டுமே தேவைப்படும் இரண்டு தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு நிபந்தனை ஒப்புதல் அளிக்க கூட்டம் ஒப்புக் கொண்டது.

#TamilSchoolmychoice

“அது ஒருபுறம் இருக்க, 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு பிபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி பயன்படுத்தவும் டி.சி.ஏ ஒப்புதல் அளித்துள்ளது,” என்று நூர் ஹிஷாம் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

முன்னதாக, பிபைசர் தடுப்பூசி மலேசியாவில் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே அங்கீகரிக்கப்பட்டது.