Home உலகம் ஈரோ 2020 : சுவிட்சர்லாந்து 3 – துருக்கி 1; இரண்டு குழுக்களுமே போட்டிகளில் இருந்து...

ஈரோ 2020 : சுவிட்சர்லாந்து 3 – துருக்கி 1; இரண்டு குழுக்களுமே போட்டிகளில் இருந்து வெளியேறுகின்றன!

1639
0
SHARE
Ad

பாக்கு (அசர்பைஜான்) : ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் இன்று திங்கட்கிழமை (ஜூன் 21) அதிகாலை 3.00 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் குரூப் “ஏ” பிரிவில் சுவிட்சர்லாந்து – துருக்கி இரண்டு குழுக்களும் மோதின.

அசர்பைஜான் தலைநகர் பாக்குவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து 3-1 என்ற கோல் எண்ணிக்கையில் துருக்கியைத் தோற்கடித்தாலும், அடுத்த சுற்றுக்குச் செல்லும் 16 குழுக்களில் ஒன்றாகத் தேர்வாகும் வாய்ப்பைப் புள்ளிக் கணக்கில் சுவிட்சர்லாந்து இழந்தது.

ஏ பிரிவில் இருந்து அடுத்த சுற்றுக்கான 16 குழுக்களில் ஒன்றாக வேல்ஸ் தேர்வாகியுள்ளது.

#TamilSchoolmychoice

நேற்றைய இத்தாலியுடனான ஆட்டத்தில் தோல்வியடைந்தாலும், புள்ளிக் கணக்கில் குரூப் ஏ பிரிவில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கும் வேல்ஸ் குழுவும் அடுத்த சுற்றுக்கான 16 குழுக்களில் ஒன்றாகத் தேர்வாகியுள்ளது.

இதைத் தொடர்ந்து குரூப் ஏ பிரிவில் இருக்கும் சுவிட்சர்லாந்து, துருக்கி இரண்டு குழுக்களுமே ஐரோப்பியக் கிண்ணப் போட்டிகளில் இருந்து வெளியேறுகின்றன.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற (ஜூன் 20) நடைபெற்ற மற்ற ஆட்டத்தின் முடிவு:

இத்தாலி 1 – வேல்ஸ் 0