Home உலகம் ஈரோ 2020 : இத்தாலி 1 – வேல்ஸ் 0 : இரண்டுமே அடுத்த 16...

ஈரோ 2020 : இத்தாலி 1 – வேல்ஸ் 0 : இரண்டுமே அடுத்த 16 குழுக்களில் தேர்வு

1388
0
SHARE
Ad

ரோம் : ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 20) நள்ளிரவு 12.00 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் குரூப் “ஏ” பிரிவில் இத்தாலி – வேல்ஸ் இரண்டு குழுக்களும் மோதின.

இத்தாலி தலைநகர் ரோம்மில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இத்தாலி 1-0 என்ற கோல் எண்ணிக்கையில் இத்தாலி வெற்றி பெற்றது.

ஐரோப்பியக் கிண்ணத்தை வெல்லும் வாய்ப்புள்ள நாடுகளில் ஒன்றாகக் கருதப்படும் இத்தாலி, இதன் மூலம் அடுத்த சுற்றுக்குத் தேர்வாகும் 16 குழுக்களில் ஒன்றாகத் தேர்வாகியுள்ளது.

#TamilSchoolmychoice

அதேவேளையில், நேற்றைய இத்தாலியுடனான ஆட்டத்தில் தோல்வியடைந்தாலும், புள்ளிக் கணக்கில் குரூப் ஏ பிரிவில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கும் வேல்ஸ் குழுவும் அடுத்த சுற்றுக்கான 16 குழுக்களில் ஒன்றாகத் தேர்வாகியுள்ளது.

ஏ பிரிவில் இடம் பெற்றிருக்கும் சுவிட்சர்லாந்து குழுவும் நேற்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் துருக்கியைத் 3-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. எனினும் வேல்ஸ் புள்ளிக் கணக்கிலும் கூடுதல் கோல் எண்ணிக்கையிலும் அடுத்த சுற்றுக்குச் செல்லும் 16 குழுக்களில் ஒன்றாகத் தேர்வாகியிருக்கிறது.

இதைத் தொடர்ந்து குரூப் ஏ பிரிவில் இருக்கும் சுவிட்சர்லாந்து, துருக்கி இரண்டு குழுக்களுமே ஐரோப்பியக் கிண்ணப் போட்டிகளில் இருந்து வெளியேறுகின்றன.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற (ஜூன் 20) நடைபெற்ற மற்ற ஆட்டத்தின் முடிவு:

சுவிட்சர்லாந்து 3 – துருக்கி 1