Home நாடு கொவிட்-19 தொற்று வீதம் தொடர்ந்து அதிகரிக்கிறது

கொவிட்-19 தொற்று வீதம் தொடர்ந்து அதிகரிக்கிறது

547
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசியாவில் கொவிட்-19 தொற்று வீதம் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு அதிகரித்து வரும் போக்கைக் காட்டுகிறது.

ஞாயிற்றுக்கிழமை இது 0.97 ஆக பதிவு செய்யப்பட்டது. முந்தைய நாள் 0.96 ஆக இருந்தது. ஆறு மாநிலங்களில் இது தேசிய சராசரியை விட அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

நெகிரி செம்பிலான் மிக உயர்ந்த தொற்று வீதத்தை, அதாவது, 1.05 ஐத் தாண்டியது. இதைத் தொடர்ந்து ஜோகூர், சரவாக், லாபுவான், சபா, கோலாலம்பூர், சிலாங்கூர், மலாக்கா மற்றும் பேராக் இடம்பெற்றுள்ளன.

#TamilSchoolmychoice

இதுவரை, இந்த ஆண்டு பதிவான மிகக் குறைந்த தொற்று விகிதம் மார்ச் 3 அன்று ஆகும். அப்போது 0.81 ஆக இருந்தது. மே 23 அன்று அதிகபட்சமாக 1.21- ஆக இது பதிவு செய்யப்பட்டிருந்தது.