Home நாடு பேராக்: சட்டமன்றம் கூடுவதற்கு மந்திரி பெசார் சுல்தானை சந்திப்பார்

பேராக்: சட்டமன்றம் கூடுவதற்கு மந்திரி பெசார் சுல்தானை சந்திப்பார்

619
0
SHARE
Ad

ஈப்போ: பேராக் தனது மாநில சட்டமன்றத்தை நடத்த திட்டமிட்ட எட்டாவது மாநிலமாக அடையாளம் காணப்படுகிறது.

பேராக் தவிர, சிலாங்கூர், பினாங்கு, மலாக்கா, பகாங், நெகிரி செம்பிலான், பெர்லிஸ் மற்றும் சபா, ஆகிய மாநிலங்களும் சட்டமன்ற அமர்வுக்கான தேதிகளை நிர்ணயித்துள்ளனர். மேலும், தங்கள் ஆட்சியாளர்கள் மற்றும் ஆளுநர்களின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறார்கள்.

இருப்பினும், பாஸ் தலைமையிலான இரண்டு மாநிலங்களான கிளந்தான் மற்றும் கெடா ஆகியவை அவசரநிலை நீக்கப்பட்ட பின்னரே அமர்வுக்கு அழைப்பு விடுப்பதாகக் கூறியுள்ளன.

#TamilSchoolmychoice

பேராக் அரசாங்கம் பேராக் சுல்தானை சந்திக்க உள்ளது. சுல்தான் நஸ்ரினிடம் முன்மொழியப்பட்ட தேதியை முன்வைக்கவும், சட்டமன்றம் மீண்டும் கூட்டுவதற்கான ஒப்புதலையும் அது பெறும்.

சபாநாயகர் முகமட் ஜாஹிர் அப்துல் காலிட் கூறுகையில், மாநில சட்டமன்ற அமர்வுக்கு உத்தேச தேதி குறித்து மந்திரி பெசார் சாரணி முகமட் சுல்தானுக்கு விளக்கமளிப்பார் என்று கூறினார்.

“நாங்கள் ஒப்புதல் பெற்றவுடன், சட்டமன்ற அமர்வுக்கு அழைப்பு விடுக்க அறிவிப்பை வெளியிடுவோம்,” என்று பெர்னாமாவை இன்று இங்கு தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.