சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா வெளியிட்ட அறிக்கையில் இதுவரையில் பதிவான மொத்த கொவிட்-19 தொற்றுநோய்களின் எண்ணிக்கை இப்போது 711,006 ஆக உயர்ந்துள்ளதாகக் கூறினார்.
மொத்தம் பதிவான 5,244 தொற்று சம்பவங்களில் 5,237 தொற்றுகள் உள்நாட்டிலேயே பரவியதாகும். 7 தொற்றுகள் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களால் பரவியதாகும்.
கடந்த ஒரு நாளில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 60,816 எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவர்களில் 879 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 433 பேருக்கு சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை வழங்கப்படுகிறது.
கடந்த ஒரு நாளில் மரண எண்ணிக்கை 83-ஐ தொட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த மரண எண்ணிக்கை 4,637-ஆக உயர்ந்திருக்கிறது.
இதைத் தொடர்ந்து நெகிரி செம்பிலான் 677 தொற்றுகளையும் சரவாக் 577 தொற்றுகளையும் கண்டிருக்கிறது.
கோலாலம்பூர் 531 தொற்றுகளைப் பதிவு செய்திருக்கிறது.