Home நாடு 25 தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹிஷாமுடினை பிரதமராக்க ஆதரவு

25 தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹிஷாமுடினை பிரதமராக்க ஆதரவு

671
0
SHARE
Ad

கோலாலம்பூர் : அம்னோவில் பிளவுகளுக்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியிருக்கின்றன.

அம்னோவின் பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ நஸ்ரி அசிஸ், 25 தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் ஹூசேன் ஓனை அடுத்த பிரதமராக்க ஆதரவு தெரிவித்திருக்கின்றனர் என இன்று புதன்கிழமை (ஜூன் 23) கூறியிருக்கிறார்.

அந்த சத்திப்பிரமாண ஆவணங்களில் கையெழுத்திட்டிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் தானும் ஒருவர் என்பதையும் நஸ்ரி அசிஸ் உறுதிப்படுத்தினார்.

#TamilSchoolmychoice

அன்வார் இப்ராகிமை பிரதமராக்க அனைத்து அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு தெரிவிப்பதாக மாமன்னரிடம் சாஹிட் ஹாமிடி கடிதம் ஒன்றை வழங்கியதால் ஹாமிடி மீது தாங்கள் நம்பிக்கை இழந்து விட்டதாக நஸ்ரி அசிஸ் தெரிவித்திருக்கிறார்.

அதைத் தொடர்ந்து பிரதமர் மொகிதின் யாசின் அரசாங்கத்தைக் கவிழ்க்க நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஏதும் நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டால் அந்தத் தீர்மானத்தை தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் ஆதரிக்க மாட்டார்கள் என்றும் நஸ்ரி அசிஸ் கூறியிருக்கிறார்.

அம்னோவில் கடந்த சில நாட்களாக நடந்து வரும் அரசியல் நகர்வுகள், அறிக்கைகளை வைத்துப் பார்க்கும் அந்தக் கட்சி வரலாறு காணாத பிளவு ஒன்றை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

இதற்கு முன் 1987-ஆம் ஆண்டில் மகாதீர்-துங்கு ரசாலி இடையிலான தலைமைத்துவப் போட்டியைத் தொடர்ந்து அம்னோ இரண்டாகப் பிளவுபட்டது.