Home இந்தியா அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் காலமானார்

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் காலமானார்

961
0
SHARE
Ad

சென்னை : அதிமுக கட்சியின் அவைத் தலைவரான மதுசூதனன் இன்று அப்போலோ மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 81.

முதுமை, உடல்நலக் குறைவு காரணமாக மதுசூதனன் மறைந்தார்.

கடந்த சில நாட்களாக இவர் உடல் நலம் குன்றிய நிலையில் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் மருத்துவமனையில் இருந்தபோது, ஒரே நாளில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், சசிகலாவும் அவரைப் பார்க்க மருத்துவமனை வந்தது பரபரப்பான செய்தியாக விவாதிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

எம்ஜிஆர், காலம் தொட்டு அதிமுகவில் தீவிர ஈடுபாடு காட்டிய மதுசூதனன், 1950-ஆம் ஆண்டுகளிலேயே எம்ஜிஆருக்கு இரசிகர் மன்றம் தொடங்கியவர்.

1991 தேர்தலில் ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த வெற்றிக்குப் பின்னர் கைத்தறி, ஜவுளித்துறை அமைச்சராகவும் இருந்தார்.

2007-ம் ஆண்டு முதல் அதிமுகவின் அவைத்தலைவராக இருக்கும் மதுசூதனன், சில ஆண்டுகளுக்கு முன்னர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இடையிலான தலைமைத்துவப் போட்டியின் போது முக்கியப்பங்காற்றினார்.

அவரின் மறைவுக்கு அதிமுக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.