Home நாடு அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு…“நீங்கள் எந்தப் பக்கம்?” – விளக்கம் கோரும் கடிதங்கள்

அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு…“நீங்கள் எந்தப் பக்கம்?” – விளக்கம் கோரும் கடிதங்கள்

553
0
SHARE
Ad

கோலாலம்பூர் : அம்னோ உச்சமன்றம் பிரதமருக்கு ஆதரவு தருவதில்லை என முடிவெடுத்திருக்கும் நிலையில் அந்த முடிவுக்கு நீங்கள் கட்டுப்பட்டு கட்சிக்கு விசுவாசமாக இருக்கிறீர்களாக என விளக்கம் கோரும் கடிதங்கள், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

இந்தக் கடிதங்கள் இன்று வியாழக்கிழமை (ஆகஸ்ட் 5) அனுப்பப்பட்டிருக்கின்றன.

அம்னோவில் தற்போது 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

மொகிதின் யாசினுக்கு ஆதரவு தருவதில்லை என்ற அம்னோ உச்சமன்றத்தின் முடிவைப் பின்பற்றத் தவறினாலோ, மறுத்தாலோ சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது அம்னோ அமைப்புச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இத்தகைய கடிதம் ஒன்று தனக்கும் இன்று மாலையில் கிடைக்கப் பெற்றதாக பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ நஸ்ரி அசிஸ் (படம்) தெரிவித்திருக்கிறார்

எனினும் அந்தக் கடிதத்திற்கு தான் பதில் எழுதப் போவதில்லை என்றும் நஸ்ரி தெரிவித்திருக்கிறார்.

மொகிதினுக்கு நாடாளுமன்றப் பெரும்பான்மை இருக்கிறதா என்பது எதிர்வரும் செப்டம்பரில் நிரூபிக்கப்படும் என்றும் இதற்கு மாமன்னரும் ஒப்புதல் தந்திருக்கிறார் என்றும் நஸ்ரி கூறியிருக்கிறார்.