Home நாடு இஸ்மாயில் சாப்ரி அமைச்சரவை பதவியேற்றது

இஸ்மாயில் சாப்ரி அமைச்சரவை பதவியேற்றது

823
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நாட்டின் 9-வது பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கும் இஸ்மாயில் சாப்ரியின் புதிய அமைச்சரவை இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2.30 மணி தொடங்கி நடைபெற்ற சடங்கில் மாமன்னர் முன்னிலையில் பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டு பதவியேற்றிருக்கிறது.

நாளைக் கொண்டாடப்படவிருக்கும் 64-வது தேசிய தினம் காலகட்டத்தில் மிகப் பெரிய சவால்களுடன், எதிர்பார்ப்புகளுடன் புதிய அமைச்சரவை பதவியேற்கிறது.

சிறந்த முறையில் செயல்படவில்லை எனப் புகார்கள் எழுந்த முந்தைய அமைச்சர்களைக் கொண்ட மறு சுழற்சி அமைச்சரவை என்ற குறைகூறல்கள் ஒருபுறம் –

#TamilSchoolmychoice

புதிய முகங்களாக அமைச்சரவையில் இடம் பெற்றிருப்பவர்களும் ஆற்றல் நிறைந்தவர்கள் இல்லை என்ற நிராகரிப்புகள் –

இவற்றுக்கிடையில் பதவியேற்கிறது இஸ்மாயில் சாப்ரியின் புதிய அமைச்சரவை.

எனினும் பிரதமர் என்ற முறையில் தலைமைத்துவம் மாறியிருப்பதால், புதிய பிரதமரின் வழிகாட்டலில் இந்த அமைச்சரவை மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் என்ற நம்பிக்கையை சில வட்டாரங்கள் வெளிப்படுத்தியிருக்கின்றன.

குறிப்பாக, மனித வள அமைச்சராக சிறப்பான பணியாற்றிய டத்தோஶ்ரீ எம்.சரவணன் மீண்டும் அதே அமைச்சுப் பொறுப்புக்கு திரும்பியிருப்பது வரவேற்பைப் பெற்றுள்ள நியமனங்களில் ஒன்றாகும்.

நாட்டின் ஒட்டு மொத்த நம்பிக்கையைப் பெற்றவராக அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் இன்னொருவர் சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் கைரி ஜமாலுடின்.

கொவிட் திட்டங்கள் அனைத்துக்குமான ஒருங்கிணைப்பு அமைச்சராகவும் கைரி பொறுப்பேற்றிருக்கிறார்.


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal