Home நாடு உலகம் விருதுகள் : உள்ளூர் திறமையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்

உலகம் விருதுகள் : உள்ளூர் திறமையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்

475
0
SHARE
Ad

 

  • உலகம் விருதுகள் வழங்கப்பட்டு உள்ளூர் திறமையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

சமீபத்தில் முதல்முறையாக நடத்தப்பட்ட உலகம் விருதுகள் நிகழ்ச்சியில் விருது வென்ற மண்ணின் மைந்தர்களான கார்த்திக் ஷாமலன், யுவராஜ் கிருஷ்ணசாமி, ரவின் ராவ் சந்திரன், சந்தேஷ், ஷாலினி பாலசுந்தரம் மற்றும் ஜி.வி.கதிர் ஆகியோருடன் உரையாடினோம்.

#TamilSchoolmychoice

1. உலகம் விருதுகள் விழாவில் பங்கேற்ற உங்களின் அனுபவத்தைப் பகிர்ந்துக் கொள்ள முடியுமா?

கார்த்திக் ஷாமலன்

கார்த்திக்: ‘நரன்’ டெலிமூவிக்காகச் ‘சிறந்த திரைக்கதை [டெலிமூவி]’ மற்றும் ‘கல்யாணம் 2 காதல்’ சீசன் 1-க்கு ‘ஆண்டின் பிரபலமானத் தொடர்’ என இரண்டு விருதுகளை நான் வென்றுள்ளேன்.

யுவராஜ்: ‘ஆடி’ டெலிமூவிக்காகப் ‘பிரபலமான முன்னணி ஆண்/ பெண் கதாப்பாத்திரம் [டெலிமூவி]’ மற்றும் ‘கல்யாணம் 2 காதல்’ சீசன் 1 தொடருக்குப் ‘பிரபலமான முன்னணி ஆண் கதாப்பாத்திரம் [தொடர்]’ என இரண்டு விருதுகளை நான் வென்றுள்ளேன்.

யுவராஜ் கிருஷ்ணசாமி

ரவின் ராவ்: ‘மன்மத புல்லட்ஸ்’ தொடருக்கு ‘உலகம் ஒளிரும் நட்சத்திரம் [டெலிமூவி & தொடர்]’ விருதும் ‘கல்யாணம் 2 காதல்’ சீசன் 1 தொடருக்குப் ‘பிரபலமானத் துணைக் கதாப்பாத்திர நடிகர்/நடிகை [டெலிமூவி & தொடர்]’ விருதும் வென்றேன்.

சந்தேஷ்: ‘ஷோக்’ பாடலுக்காக ‘ஆண்டின் பிரபலமான மலேசியத் தமிழ்ப் பாடல்’ மற்றும் ‘ஆண்டின் பிரபலமான இசையமைப்பாளர்’ விருதுகளையும் வென்றேன்.

ஷாலினி: ‘சாரா’ டெலிமூவிக்காகச் ‘சிறந்த இயக்குநர் [டெலிமூவி]’ மற்றும் ‘மென்டே’ தொடருக்காக ‘சிறந்த இயக்குநர் [தொடர்]’ ஆகிய இரண்டு விருதுகளையும் வென்றேன்.

ஜி.வி.கதிர்: ‘நரன்’ டெலிமூவிக்காகச் ‘சிறந்த ஒளிப்பதிவு [டெலிமூவி]’ விருதையும் ‘கள்வனை கண்டுபிடி’ தொடருக்காக ‘சிறந்த ஒளிப்பதிவு [தொடர்]’ ஆகிய இரு விருதுகளையும் வென்றேன்.

2. நீங்கள் வென்ற விருதுகளிலிருந்து மறக்கமுடியாதத் தருணங்களைப் பகிரவும்.

கார்த்திக்: நான் கிட்டத்தட்ட 13 ஆண்டுகளாக உள்ளூர் திரைப்படத் துறையில் ஈடுபட்டுள்ளேன். எழுதுவதை முழுமையாக இரசித்து வருகிறேன். ‘நரன்’ குற்ற விசாரணையைக் கையாளும் போது ஏற்படும் ஒரு சமூகப் பிரச்சினையைப் பற்றி விவாதிக்கிறது. ஆஸ்ட்ரோ மற்றும் இரசிகர்களின் ஆதரவிற்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். திரைக்கதை எழுதுவது முதல் செயல்படுத்தல் வரைக் ‘கல்யாணம் 2 காதல்’ சீசன் 1-இன் பயணம் எளிதல்ல. இரவும் பகலாக உழைத்த தொழில்நுட்ப வல்லுநர் (டெக்னீஷியன்) குழுவினருக்கு இந்த விருதுகளை அர்ப்பணிக்கிறேன். நான் எந்த விருதையும் எதிர்ப்பார்க்கவில்லை என்றாலும், ‘நரன்’ மற்றும் ‘கல்யாணம் 2 காதல்’ சீசன் 1 ஆகியவற்றிற்கான விருதுகளை வென்றது உண்மையில் பாக்கியமானத் தருணங்கள்.

யுவராஜ்: கிட்டத்தட்ட 8 வருடங்களாக உள்ளூர் திரையுலகில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறேன். ‘ஆதி’ என்ற டெலிமூவியில், மிகக் கடினமானக் கதாப்பாத்திரத்தில் நடித்தேன்.

இயக்குநரின் வேண்டுக்கோளுக்கு இணங்க, கிளைமாக்ஸ் காட்சியின் போது எடுக்கப்பட்ட 8 நிமிட அபாயகரமானக் காட்சியைக் குறைந்தக் கண்காணிப்பில், ஒரே டேக்கில் நடித்தேன். 6 நிமிடக் காட்சிக்கானத் தயாரிப்பு கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஆனது. ‘கல்யாணம் 2 காதல்’ சீசன் 1 தொடரின் ஒவ்வொரு படப்பிடிப்பு நாளும் எனக்குச் சிறப்பு வாய்ந்ததாக இருந்தது.

நான் ‘ஹரிஷ்’ என்றக் கதாப்பாத்திரத்தில் நடித்தேன். அக்கதாப்பாத்திரம் கொஞ்சம் சிக்கலானதாக இருந்தாலும், சிறந்த உள்ளூர் இயக்குநர்களில் ஒருவரானக் கார்த்திக் ஷாமலனின் வழிக்காட்டுதலால் அதை நான் செவ்வென நடித்தேன்.

ரவின் ராவ்

ரவின் ராவ்: 2018-இல் கார்த்திக் ஷாமலனுடன் பணிபுரிந்த அனுபவம் உட்பட, 2014-இல் இருந்து இயக்குநர் அனுபவம் எனக்கு உள்ளது. 2020-ஆம் ஆண்டில் ‘கள்வனை கண்டுபிடி’ உட்பட நான் விருதுகளை வென்ற ‘கல்யாணம் 2 காதல்’ சீசன் 1 மற்றும் ‘மன்மத புல்லட்ஸ்’ ஆகிய பல தொடர்களில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்ததில் நான் அதிர்ஷ்டசாலி என்றுதான் கூறுவேன்.

‘மன்மத புல்லட்ஸ்’ தொடரில் ‘கிருஷ்ணா’ என்ற கதாப்பாத்திரத்துக்கும் ‘கல்யாணம் 2 காதல்’ சீசன் 1 தொடரில் ‘பிண்தாங் தெராங்’ என்றக் கதாப்பாத்திரத்த்துக்கும் விருதுகளை வென்றதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். மேடையில் எனது இரசிகர்களுக்கு நன்றித் தெரிவித்தது என் மனதிற்கு நெருக்கமான, மறக்கமுடியாதத் தருணமாகும்.

சந்தேஷ்

சந்தேஷ்: என் தந்தையைத் தவிர, இளையராஜா, மைக்கல் ஜாக்சன், ஏ.ஆர்.ரகுமான் மற்றும் டார்க்கி போன்ற ஜாம்பவான்களின் இசை என்னை உள்ளூர் இசைத் துறையில் ஈடுபடத் தூண்டியது. நான் வானவில் சூப்பர் ஸ்டார் 2011-இன் இறுதிப் போட்டியாளராக இருந்தேன், வானவில் சூப்பர் ஸ்டார் 2012-இல் பங்கேற்றேன், ‘Iklon’ (2011) மற்றும் சூப்பர் ஸ்டார் ஏசியா சேலஞ்ச் (2013) ஆகிய பாடல் போட்டிகளிலும் வெற்றிப் பெற்றேன்.

மேலும், Anugerah Industri Malaysia (AIM) விருது நிகழ்ச்சியில் ‘ஆண்டின் சிறந்த நாட்டுப்புறப் பாடலுக்கானப்’ பிரிவில் எனது முதல் தனிப்பாடலுக்கான விருதையும் வென்றேன். 50 மில்லியன் இரசிகர்களைப் ஈர்த்த எனதுத் தனிப்பாடலான ‘கத்தி’ தவிர ‘சிலாப் காவின்’ மற்றும் ‘தங்காப் பசா’ என இரண்டு வெற்றிகரமான ஆல்பங்களை நான் தயாரித்துள்ளேன்.

டத்தோ டேவிட் ஆறுமுகம் (எலிகேட்ஸ்) அவர்களுடன் பாடியதோடு மாபெரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் முன்னிலையில் பாடியது இசைத்துறையில் எனக்கு கிடைத்தப் பாக்கியமாக எண்ணுகிறேன்.

நான் என் சுயத் தயாரிப்பு நிறுவனத்தை நிறுவியுள்ளேன். மேலும், ஹரி கலிபாவுடன் இணைந்துத் தயாரித்த ‘அமலினா’ பாடல் ஒரு மில்லியன் இரசிகர்களைப் பெற்ற அதிவேக இசைக் காணொலியாக மலேசியா புக் ஆஃப் ரெக்கார்ட்சில் இடம் பெற்றது. ‘என்ன சொல்ல போகிறாய்’ திரைப்படத்தில் ‘உருட்டு’ என்றப் பாடலைப் பாடியதால், இந்தியாவில் பின்னணிப் பாடகராக வேண்டும் என்ற எனது கனவு உயிர்ப்பித்தது. பொன்னான வாய்ப்பை வழங்கிய விவேக் மெர்வினுக்கு நன்றி.

ஷாலினி பாலசுந்தரம்

ஷாலினி: நான் இதுவரை மூன்று திரைப்படங்களை இயக்கியுள்ளேன். எப்போதும் என் மீது மிகுந்த அன்பையும் ஆதரவையும் பொழியும் எனது இரசிகர்கள் அனைவருக்கும் இந்த விருதை சமர்ப்பிக்கிறேன்.

ஜி.வி.கதிர்: நான் 2013-இல் தயாரிப்பு உதவியாளராகத் தொழில்துறையில் எனதுப் பயணத்தைத் தொடங்கினேன். புகைப்பட இயக்குநராக (DOP) எனது முதல் மைல்கல் ‘என்னவள்’ திரைப்படமாகும். யூடியூப்பில் ஒரு மில்லியன் இரசிகர்கள் பார்த்து இரசித்த ‘பொய்க்காரன்’, ‘சொக்கா’ மற்றும் ‘சகியே’ (சிங்கப்பூர்) ஆகிய இசைக் காணொலிகள் எனது தொழில் வளர்ச்சிக்கு பங்களித்த மிக முக்கிய காணொலிகளாகும்.

இன்றுவரை, ‘கள்வனை கண்டுபிடி’, ‘அசுர வேட்டை’, ‘சுவர லயம்’ மற்றும் ‘மணிரத்னம் வந்தாச்சு’ போன்ற பல ஆஸ்ட்ரோ தொடர்கள் மற்றும் ‘நரன்’ மற்றும் ‘ராம் லீலா லாக்டவுன்’ உள்ளிட்ட ஆஸ்ட்ரோ டெலிமூவிகளிலும் பணியாற்றியிருக்கிறேன்.

ஜி.வி.கதிர்

3. உங்களின் கருத்து/செய்தியை உங்கள் இரசிகர்களுடன் பகிர்ந்துக் கொள்க

கார்த்திக்: ‘கள்வனை கண்டுபிடி’, ‘கல்யாணம் 2 காதல்’ சீசன் 1, ‘நரன்’, ‘மணிரத்னம் வந்தாச்சு’ மற்றும் ‘நக்கீரன்’ ஆகியவற்றை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி. உள்ளடக்க விநியோகத்தைத் தொடர்ந்து மேம்படுத்தி, எதிர்க்காலத்தில் உயர்தர உள்ளடக்கத்தை வழங்குவதை உறுதிச் செய்வேன்.

மேலும், நல்ல உள்ளடக்கத்தை வழங்கக் கடுமையாக முயற்சிக்கும் புதிய திறமையாளர்களை ஊக்கப்படுத்துங்கள். உங்கள் ஊக்கம் நிச்சயம் இந்தத் துறையை மேம்படுத்தும்.

யுவராஜ்: இந்தத் துறையில் நான் பெற்ற மிகப்பெரியச் சொத்து இரசிகர்களும் நலம் விரும்பிகளும்தான். அவர்களின் அன்பும், ஆதரவும், ஊக்கமும் இல்லாமல் நான் இவ்வளவு வளச்சியை அடைந்திருக்க முடியாது. அவர்களின் ஆசியுடனும் முடிவில்லாத ஆதரவுடனும் சிறந்த நடிகராகவும், திரைப்படத் தயாரிப்பாளராகவும் முன்னேறத் தொடர்ந்து பாடுபடுவேன்.

ரவின் ராவ்: எனது தொழில் வாழ்க்கையின் தொடக்கத்தில் இருந்து எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் மற்றும் எனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். என்னால் முடிந்தவரை இரசிகர்களை மகிழ்விப்பேன் என்று உறுதியளிக்கிறேன்.

சந்தேஷ்: எனது அன்பு மனைவி, ராஜேஸ்வரி மலையாண்டி, எனது பெற்றோர், சுகுமாரன் விஜ சித்ரா சரஸ்வதி, குடும்பத்தினர், நண்பர்கள், ஆசிரியர்கள், இரசிகர்கள், மேலாளர்கள், ரேபிட் மேக், ஷீசே, சைக்கோ யூனிட் குடும்பத்தினர், ரெண்தாக் அங்காசா தயாரிப்புக் குழு மற்றும் ஊடக நண்பர்கள் என அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைத்து வாய்ப்புகளையும் வழங்கிய ஆஸ்ட்ரோ மற்றும் ராகாவிற்க்கு மனமார்ந்த நன்றி.

ஷாலினி: எனக்கு அழகானப் பயணத்தை வழங்கிய அனைத்து இரசிகர்களுக்கும் நன்றி, அன்பைப் பரப்புங்கள்.
ஜி.வி.கதிர்: வெற்றிக்காகப் பாடுபடும் ஒவ்வொருவரும், உங்கள் விருப்பத்தில் நம்பிக்கைக் கொண்டு , தொடர்ந்து கடினமாக உழைத்தால், நீங்கள் விரும்பிய மற்றும் கனவு கண்ட உயரங்களை நீங்கள் நிச்சயமாக அடைவீர்கள். இன்னும் பல தரமான காட்சிகளுடன் பார்வையாளர்களை மகிழ்விப்பேன்.