Home உலகம் ஆப்கானிஸ்தானில் குருத்துவாரா மீது தீவிரவாதிகள் தாக்குதல்

ஆப்கானிஸ்தானில் குருத்துவாரா மீது தீவிரவாதிகள் தாக்குதல்

635
0
SHARE
Ad

காபூல் : ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள சீக்கிய குருத்துவாராவில் நேற்று சனிக்கிழமை (ஜூன் 18) காலை 30 பேர் வழிபாடு நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 2 பேர் பலியானதாகவும் 7 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து, ஆப்கானிஸ்தான் வாழ் சீக்கியர்கள் மற்றும் இந்துக்களுக்கு இ-விசா என்னும் மின்னியல் விசாக்களை இந்திய அரசாங்கம் வழங்க உள்ளது.  ஆப்கானிஸ்தான் வாழ் சீக்கியர்கள் மற்றும் இந்துக்களுக்கு கிட்டத்தட்ட 100 இ-விசாக்களை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, முன்னுரிமை அடிப்படையில் 100 இ-விசாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.