அந்தக் கருத்து பெரும் சர்ச்சையாகி பொதுத் தேர்தலில் முக்கியப் பிரச்சாரமாக எதிர்க்கட்சிகளால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்பில் காணொலி ஒன்றின் வழி கருத்து தெரிவித்த விக்னேஸ்வரன், அது சாஹிட் ஹாமிடி நகைச்சுவைக்காக சொன்ன கருத்து எனத் தெரிவித்தார்.
ஆனால், அன்வார் இப்ராகிம் மாமன்னரிடம் பொதுமன்னிப்பு கேட்டு விடுதலை பெற்றார் – ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் மீதான ஊழல் வழக்கு நடந்து கொண்டிருக்கும்போதே அவர் மீதான வழக்கு சட்டத்துறையால் (அட்டர்னி ஜெனரல் அலுவலகம்) மீட்டுக் கொள்ளப்பட்டது – எனவும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.
பொதுத் தேர்தலில் கைவசம் பிரச்சார பலம் இல்லாத எதிர்க்கட்சிகள் இதுபோன்று நாங்கள் பேசுவதைத் திரித்தும் சர்ச்சையாக்கியும் அரசியல் ஆதாயம் காண முற்படுகிறது எனவும் விக்னேஸ்வரன் குற்றம் சாட்டினார்.