Home நாடு பகாங் சட்டமன்றம் : பெரிக்காத்தான் 17 – தேசிய முன்னணி 16 – பக்காத்தான் 8

பகாங் சட்டமன்றம் : பெரிக்காத்தான் 17 – தேசிய முன்னணி 16 – பக்காத்தான் 8

627
0
SHARE
Ad


குவாந்தான் : 15-வது பொதுத் தேர்தலுடன் நடத்தப்பட்ட பகாங் சட்டமன்றத் தேர்தல்களிலும் அதிகமானத் தொகுதிகளை பெரிக்காத்தான் நேஷனல் கைப்பற்றியிருக்கிறது.

17 தொகுதிகளை பெரிக்காத்தான் கைப்பற்ற – 16 தொகுதிகளை தேசிய முன்னணி கைப்பற்றியிருக்கிறது. தேசிய முன்னணி – அம்னோவின் கோட்டையாகத் திகழ்ந்து வந்த பகாங்கில் முதன் முறையாக தேசிய முன்னணி தோல்வி கண்டிருக்கிறது.

பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி 8 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது.

#TamilSchoolmychoice

இதைத் தொடர்ந்து 42 சட்டமன்றங்களைக் கொண்ட பகாங் அரசாங்கத்தில் எந்தக் கூட்டணியுமே பெரும்பான்மை பெறவில்லை.

தியோமான் சட்டமன்றத் தொகுதிக்கான பெரிக்காத்தான் வேட்பாளர் மரணமடைந்ததைத் தொடர்ந்து அந்தத் தொகுதிக்கான இடைத் தேர்தல் டிசம்பர் 7-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

எனவே, பேராக் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள குழப்பத்தைப் போன்று எந்தக் கூட்டணி யாருடன் இணைந்து பகாங் மாநில அரசாங்கத்தை அமைக்கும் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.