சுயநினைவிழந்து காணப்பட்ட நிலையில் யூனுஸ் ரம்லி அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார்.
இதைத் தொடர்ந்து தியோமான் சட்டமன்றத் தொகுதிக்கான வாக்களிப்பு இன்று நடைபெறாது. அந்தத் தொகுதிக்கான இடைத் தேர்தல் பிறிதொரு நாளில் நடத்தப்படும்.
இந்தத் தொகுதியில் 5 முனைப் போட்டி ஏற்பட்டிருந்தது. சுலைமான் பாக்கார் (சுயேச்சை), பெஜூவாங் கட்சி சார்பில் ஓஸ்மான் ஏ.பாக்கார், முகமட் பாட்ஸ்லி முகமட் ரம்லி (பக்காத்தான் ஹாரப்பான்), முகமட் ஜொஹாரி ஹூசேன் (தேசிய முன்னணி) ஆகியோர் இங்கு போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர்.