Home நாடு பாடாங் செராய் இடைத் தேர்தல் : டிசம்பர் 7-ஆம் தேதி நடைபெறும்

பாடாங் செராய் இடைத் தேர்தல் : டிசம்பர் 7-ஆம் தேதி நடைபெறும்

509
0
SHARE
Ad
அமரர் கருப்பையா முத்துசாமி

புத்ராஜெயா :கடந்த நவம்பர் 16-ஆம் தேதி பாடாங் செராய் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினரும், 15-வது பொதுத் தேர்தலில் அந்தத் தொகுதிக்கான பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி வேட்பாளருமான கருப்பையா முத்துசாமி காலமானார்.

அதைத் தொடர்ந்து அந்தத் தொகுதிக்கான தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. வேட்பாளர் ஒருவர் மரணமடைந்த காரணத்தால், பாடாங் செராய் தொகுதிக்கான இடைத் தேர்தல் எதிர்வரும் டிசம்பர் 7-ஆம் தேதி நடைபெறும்.

வேட்பு மனுத் தாக்கல் நவம்பர் 24-ஆம் தேதி நடைபெறும். இதன் காரணமாக அந்தக் தொகுதிக்கான தேர்தல் மீண்டும் வேட்புமனுத் தாக்கல் தொடங்கி, வாக்களிப்பு என நடைபெறும். பிரச்சாரங்களுக்கு 13 நாட்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

#TamilSchoolmychoice

முன்கூட்டிய வாக்குப் பதிவு டிசம்பர் 3-ஆம் தேதி நடைபெறும்.

தேசிய முன்னணி சார்பில் பாடாங் செராய் தொகுதி மீண்டும் மஇகாவுக்கே ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 15-வது பொதுத் தேர்தலில் டத்தோ சிவராஜ் சந்திரன் இங்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்தார்.

கருப்பையாவுக்குப் பதிலாக புதிய வேட்பாளரை பக்காத்தான் ஹாரப்பான் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அறிவிக்கும் என தொடர்புப் பிரிவுக்கான இயக்குநர் ஃபாஹ்மி பாட்சில் அறிவித்தார்.

முன்னாள் இராணுவ வீரரான கருப்பையா 2018 பொதுத் தேர்தலில் 8,813 வாக்குகள் பெரும்பான்மையில் பாடாங் செராய் தொகுதியில் வெற்றி பெற்றார். தேசிய முன்னணி வேட்பாளர் மசீசவின் டத்தோ லியோங் யோங் கோங், பாஸ் வேட்பாளர் முகமட் சோப்ரி ஓஸ்மான் ஆகியோரை அவர் தோற்கடித்தார்.

இந்த முறை பாடாங் செராய் தொகுதி 133,867 பதிவு பெற்ற வாக்குகளைக் கொண்டிருக்கிறது.

பாடாங் செராய் தொகுதிக்கான தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து இன்று சனிக்கிழமை நடைபெறும் பொதுத் தேர்தலில் 221 தொகுதிகளுக்கான வாக்களிப்பு மட்டுமே நடைபெறும்.