Home நாடு பெர்லிஸ் : 14 தொகுதிகளை வென்று பெரிக்காத்தான் ஆட்சி அமைக்கிறது

பெர்லிஸ் : 14 தொகுதிகளை வென்று பெரிக்காத்தான் ஆட்சி அமைக்கிறது

432
0
SHARE
Ad

கங்கார் : யாரும் எதிர்பாராத அளவுக்கு வெற்றிகளை நாடு முழுவதும் பதிவு செய்திருக்கும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி, பெர்லிஸ் மாநிலத்தில் அபார வெற்றியைப் பெற்றிருக்கிறது.

மொத்தமுள்ள 15 சட்டமன்றத் தொகுதிகளில் 14-ஐ பெரிக்காத்தான் கூட்டணி பெற்றுள்ளது. இண்ட்ரா காயாங்கான் சட்டமன்றத் தொகுதியை மட்டும் பக்காத்தான் ஹாரப்பான் கைப்பற்றியது.

இதைத் தொடர்ந்து பெர்லிஸ் மாநிலத்தில் தனிப் பெரும்பான்மை பெற்று பெரிக்காத்தான் ஆட்சி அமைக்கிறது. முதன் முறையாக பெர்லிஸ் மாநில அரசாங்கத்தை பெரிக்காத்தான் கூட்டணி கட்டமைக்கிறது.

#TamilSchoolmychoice

மேலும் பெர்லிஸ் மாநிலத்திலுள்ள 3 நாடாளுமன்றத் தொகுதிகளையும் பெரிக்காத்தான் கைப்பற்றியிருக்கிறது. அம்னோவிலிருந்து வெளியேறி போட்டியிட்ட ஷாஹிடான் காசிம் ஆராவ் தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறார்.