Home நாடு பேராக் சட்டமன்றம் : பெரிக்காத்தான் 26; பக்காத்தான் 24; தேசிய முன்னணி 9

பேராக் சட்டமன்றம் : பெரிக்காத்தான் 26; பக்காத்தான் 24; தேசிய முன்னணி 9

443
0
SHARE
Ad

ஈப்போ : பேராக் மாநிலத்தில் அடுத்து எந்தக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்பதை முடிவு செய்வதில் பேராக் சுல்தான் (படம்) முக்கியப் பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

15-வது பொதுத் தேர்தலோடு நடத்தப்பட்ட பேராக் சட்டமன்றத்திற்கான தேர்தலில் மொத்தமுள்ள 59 தொகுதிகளில் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி 26 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இருப்பினும் தனித்து ஆட்சி அமைக்க இந்த எண்ணிக்கை போதுமானது அல்ல.

பக்காத்தான் ஹாரப்பான் 24 தொகுதிகளைக் கைப்பற்றியது. தேசிய முன்னணி 9 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது.

#TamilSchoolmychoice

இதைத் தொடர்ந்து மாநில அரசாங்க ஆட்சி அமைக்கப் போவது யார் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஏதாவது 2 கூட்டணிகள் இணைந்தால் மட்டுமே புதிய மாநில அரசாங்கம் அமைக்க முடியும் என்ற நிலைமை பேராக் மாநிலத்தில் உருவாகியுள்ளது.