Home இந்தியா ஓபிஎஸ்-இபிஎஸ் இணையக் கூடிய சாத்தியம் ஏற்படுமா?

ஓபிஎஸ்-இபிஎஸ் இணையக் கூடிய சாத்தியம் ஏற்படுமா?

645
0
SHARE
Ad

சென்னை : அதிமுகவில் ஏற்பட்ட பிளவு தற்போது உச்ச நீதிமன்றத்து வழக்காக மாறியிருக்கிறது. இன்று வெள்ளிக்கிழமை சென்னை வந்த பாஜகவின் தமிழ் நாடு பொறுப்பாளர் சி.டி.ரவி தனித்தனியாக ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவரையும் சந்தித்தார்.

அதன் பிறகு, பிற்பகலில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, வழக்கின் தீர்ப்பு வெளியிடப்படும்வரை, அதிமுக பொதுக்குழுதான் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் வேட்பாளரைத் தேர்வு செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பாஜக நடத்தும் சமாதானப் பேச்சுவார்த்தை, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஓபிஎஸ், இபிஎஸ் இருதரப்புகளும் இணையக்கூடும் என்ற ஆரூடங்கள் எழுந்துள்ளன.