சென்னை : இந்தியாவின் பிரபல பாடகி வாணி ஜெயராம் காலமானார். அண்மையில் இந்தியக் குடியரசு தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு அவருக்கு பத்மபூஷண் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இந்திய அரசாங்கத்தின் விருதுகளில் 3-வது உயரிய விருது இதுவாகும்.
கடந்த 50 ஆண்டுகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி சாதனை புரிந்தவர் வாணி ஜெயராம்.
அபூர்வ ராகங்கள் படத்தில் ஒலித்த ‘ஏழு ஸ்வரங்களில் எத்தனை ராகம்’, ‘கேள்வியின் நாயகனே’ பாடல்களும், தீர்க்க சுமங்கலி படத்தில் அவர் பாடிய ‘மல்லிகை என் மன்னன் மயங்கும்’ பாடலும் இன்றுவரை ரசிகர்களின் மனங்களில் நிலைத்து நிற்கும் பாடல்களில் சிலவாகும்.