Home நாடு அன்வார் இப்ராகிமின் தைப்பூச தின வாழ்த்து

அன்வார் இப்ராகிமின் தைப்பூச தின வாழ்த்து

567
0
SHARE
Ad

கோலாலம்பூர் : இன்று கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இந்துப் பெருமக்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

நாட்டில் கொண்டாடப்படும் பல்வேறு திருவிழாக்களும், பேணப்படும் கலாச்சாரங்களும், நாம் அனைவரும் இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வை மேலும் மேம்படுத்த வேண்டும் என்பதற்கான வலுவான காரணமாகும்.

நாம் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நமக்கிடையிலான ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அன்வார் கேட்டுக் கொண்டார். நமது அன்புக்குரிய தாய்நாட்டுக்காக இதனை நாம் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.