அவர் சிறுநீரக பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக ஊடகங்கள் தெரிவித்தன.
காரணமாக மெட்வே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நடிகர் விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான வாரிசு, மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படங்களில் ஆகக் கடைசியாக நடிகர் பிரபு
கடந்த பிப்ரவரி 20ம் தேதி அவர் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த மருத்துவமனை விடுத்துள்ள அறிக்கையில் நடிகர் பிரபு சிறுநீரக பிரச்சினை காரணமாக அனுமதிக்கப்பட்டதாகவும் அவருக்கு கல் அடைப்பு இருந்தது கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரக கற்கள் அகற்றப்பட்டன எனவும் தெரிவிக்கப்பட்டது.
அவர் தற்போது முழு உடல் நலத்துடன் இருக்கிறார் என்றும் மருத்துவமனை அறிக்கை தெரிவித்தது.