Home உலகம் நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதற்கு காலம் இன்னும் கனியவில்லை

நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதற்கு காலம் இன்னும் கனியவில்லை

420
0
SHARE
Ad

வில்னியஸ் (லித்துவேனியா) : 31 உறுப்பு நாடுகளைக் கொண்டது நேட்டோ கூட்டமைப்பு. இதில் இணைவதற்கு உக்ரேன் விண்ணப்பித்துள்ளது. வில்னியஸ் நகரில் நடைபெறும் நேட்டோ கூட்டமைப்பு மாநாட்டில் உக்ரேன் இணைத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ரஷியாவுடன் போரில் ஈடுபட்டிருக்கும் உக்ரேன் நேட்டோவில் இணைவதற்கான காலக்கெடுவை நேட்டோ இன்னும் நிர்ணயிக்கவில்லை.

இதனால் உக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கி தன் அதிருப்தியைத் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் துருக்கி சுவீடன் போன்ற மற்ற நாடுகள் நேட்டோவில் இணைவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

ஐரோப்பிய நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான இராணுவக் கூட்டமைப்பு நேட்டோ என்னும் அமைப்பாகும்.