வெளியிடப்பட்ட ஒரே நாளில் 5 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் யூடியூப் தளத்தில் மட்டும் இந்த முன்னோட்டத்தை பார்த்து மகிழ்ந்திருக்கிறார்கள்.
ஜவான் முன்னோட்டம் பல வகைகளிலும் ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறது. ஓர் இராணுவ அதிகாரியாக ஷாருக்கான் காட்டப்படுகிறார். அவரின் இளமைப்பருவ காட்சிகளும் காட்டப்படுகின்றன. விஜய் சேதுபதியும் இளமைத் தோற்றத்தில் காட்டப்படுகிறார். ஆயுத வியாபாரியாக அவரின் வில்லன் கதாபாத்திரம் சித்திரிக்கப்பட்டிருக்கிறது.
ஷாருக்கான் ரயிலை பயணிகளோடு கடத்தும் காட்சிகளும் இடம் பெற்றிருக்கின்றன. நயன்தாரா காவல் துறை அதிகாரியாக வருகிறார். படத்தைப் பார்க்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும் ஜவான் முன்னோட்டத்தை கீழ்க்காணும் யூடியூப் இணைப்பில் காணலாம்: