Home இந்தியா விஜய்காந்த் மறைவு : வெள்ளிக்கிழமை (டிசம்பர் 29) தேமுதிக அலுவலக வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்படுவார்

விஜய்காந்த் மறைவு : வெள்ளிக்கிழமை (டிசம்பர் 29) தேமுதிக அலுவலக வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்படுவார்

472
0
SHARE
Ad

சென்னை : இன்று வியாழக்கிழமை (டிசம்பர் 28) காலையில் காலமான நடிகரும் தேமுதிக கட்சித் தலைவருமான விஜய்காந்த், அவரின் கட்சி தலைமையகம் அமைந்திருக்கும் வளாகத்திலேயே நாளை வெள்ளிக்கிழமை 4.45 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

71 வயதான விஜய்காந்த் கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்த் திரையுலகில் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக வலம் வந்தார்.பின்னர் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் என்னும் அரசியல் கட்சியைத் தொடங்கி அரசியலிலும் ஈடுபட்டார்.

விஜயகாந்தின் இறுதிச் சடங்குகள் அரசு மரியாதையோடு நடைபெறும் எனவும் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில், விஜயகாந்திற்கு மரியாதை தெரிவிக்கும் பொருட்டு திரையரங்குகளில் இன்றைய காலைக் காட்சிகள் இரத்து செய்யப்பட்டன.

திரைப்படப் படப்பிடிப்புகளும் இரத்து செய்யப்பட்டன.