Home கலை உலகம் விஜய் நடிக்கும் – வெங்கட் பிரபு இயக்கும் படம் – G.O.A.T

விஜய் நடிக்கும் – வெங்கட் பிரபு இயக்கும் படம் – G.O.A.T

580
0
SHARE
Ad

சென்னை : விஜய்யின் 68-வது படமாக ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இன்று அந்தப் படத்தின் முதல் தோற்றம் – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் – இன்று ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 31) வெளியிடப்பட்டது.

விஜய்யின் புதிய படத்திற்கு G.O.A.T எனப் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. என்ன ‘ஆடு’ எனப் பெயர் சூட்டியிருக்கிறார்கள் என நீங்கள் ஆச்சரியப்படலாம். Greatest of All Time என்பதன் முதல் எழுத்துகளின் சுருக்கம்தான் G.O.A.T என்ற தலைப்பாகும். ஆனால் தமிழில் இதற்கு என்ன பெயர் வைப்பார்கள் என்ற குழப்பம் நீடிக்கிறது.

விஜய்யின் தோற்றத்தை வைத்துப் பார்க்கும்போது அவருக்கு இரட்டை வேடங்கள் – தந்தை, மகன் – எனத் தெரிகிறது. படத்தின் படப்பிடிப்பு பல வெளிநாடுகளிலும் நடத்தப்படுகிறது.

#TamilSchoolmychoice

படம் வெளியிடப்படும்போது தமிழில் வேறு பெயர் சூட்டப்படுமா? அல்லது G.O.A.T என்னும் ஆங்கிப் பெயரிலேயே படம் வெளியாகுமா?