Home உலகம் கமலா ஹாரிசின் துணையதிபர் வேட்பாளர் யார்? இறுதிக்கட்ட பரபரப்பு!

கமலா ஹாரிசின் துணையதிபர் வேட்பாளர் யார்? இறுதிக்கட்ட பரபரப்பு!

339
0
SHARE
Ad

வாஷிங்டன் — ஜனநாயகக் கட்சியின் சார்பில் நடப்பு துணையதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுவது உறுதியாகிவிட்ட நிலையில், யாரை அவர் துணையதிபராகத் தேர்ந்தெடுப்பார் என்ற ஆரூடங்கள் எழுந்துள்ளன. இதன் காரணமாக அவரின் இறுதிக் கட்டத் தேர்தல் பிரச்சாரங்களில் பரபரப்பு கூடியுள்ளது.

டொனால்ட் டிரம்ப் தனது துணையதிபர் வேட்பாளரை அறிவித்து விட்டார். செனட்டர் ஜே.டி.வான்ஸ் என்பவர்தான் அவர். அவரின் மனைவி உஷா வான்ஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவராவார். கமலா ஹாரிசின் இந்தியப் பின்னணி காரணமாக ஜே.டி.வான்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார் எனக் கருதப்படுகிறது.

நாளை பிலாடெல்பியா நகரில் நடைபெறும் ஜனநாயகக் கட்சியின் மாபெரும் பிரச்சாரக் கூட்டத்திற்கு முன்பாக அவர் தனது துணையதிபர் வேட்பாளரை சமூக ஊடகங்களின் வழி அறிவிப்பார் என்றும் துணையதிபர் வேட்பாளருடன் அந்தப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஜூலை 21-ஆம் தேதி மீண்டும் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என அறிவித்தார்.

தனது விலகலை அறிவிக்கும்போது, பைடன் மூன்று மாதங்களில் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலுக்கு தனது ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸை பகிரங்கமாக ஆதரித்தார்.

ஜனநாயகக் கட்சியின் பல முக்கியத் தலைவர்கள் அதன் பின்னர் கமலா ஹாரிஸுக்கு தங்கள் ஆதரவை பகிரங்கமாக அளித்துள்ளனர். முன்னாள் அதிபர் பராக் ஒபாமா அவர்களில் ஒருவராவார்.

அதிபர் தேர்தலில் சில சாதகங்களை கமலா கொண்டிருக்கிறார். பராக் ஒபாமாவுக்குப் பிறகு இரண்டாவதாக அதிபர் தேர்தலில் குதிக்கும் கறுப்பின இனத்தைச் சேர்ந்த வேட்பாளர் – வெற்றி பெற்றால் முதல் பெண் அமெரிக்க அதிபர் – முதல் இந்திய வம்சாவளி இனத்தவர் – ஆகியவையே அந்த சாதகங்கள்.

பைடனுடன் ஒப்பிடும்போது இந்த கறுப்பின, இந்திய, ஆசிய சமூகங்களின் ஆதரவை கமலா பெற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

59 வயதான கமலா 78 வயதான டிரம்பை விட வயது குறைந்தவர் என்பதும் அவருக்கான சாதகங்களில் ஒன்றாகும்.