Home உலகம் வங்காள தேசத்தில் இராணுவ ஆட்சி! ஷேக் ஹசீனா தப்பி ஓட்டம் – இந்தியாவில் அடைக்கலம்!

வங்காள தேசத்தில் இராணுவ ஆட்சி! ஷேக் ஹசீனா தப்பி ஓட்டம் – இந்தியாவில் அடைக்கலம்!

298
0
SHARE
Ad
ஷேக் ஹசினா

டாக்கா : வங்காளதேசத்தில் நடைபெற்று வரும் மக்கள் போராட்டம் எதிர்பாராத அரசியல் திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. கிளர்ச்சியாளர்கள் ஷேக் ஹசினாவின் வீட்டை முற்றுகையிட்டனர். அவரோ நாட்டிலிருந்து தப்பி புதுடில்லி சென்றடைந்துள்ளதாகவும் அங்கிருந்து இலண்டன் செல்லவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மோடி அரசாங்கம் அவரின் வெளியேற்றத்திற்கு உதவியிருக்கிறது.

வங்காளதேச இராணுவத் தலைவர் சமூக ஊடகங்களின்வழி இராணுவம் வங்காள தேச ஆட்சியைக் கைப்பற்றியிருப்பதாகவும், இடைக்கால அரசாங்கம் நிறுவப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

இதற்கிடையில் வங்காளதேசத்தின் தந்தை எனப் போற்றப்படும் முஜிபுர் ரஹ்மானின் திருவுருவச் சிலை கிளர்ச்சியாளர்களால் உடைத்து சேதப்படுத்தப்பட்டது.