Home நாடு மாமன்னராக, ஜோகூர் ஆட்சியாளர் கலந்து கொண்ட முதல் சுதந்திர தினக் கொண்டாட்டம்!

மாமன்னராக, ஜோகூர் ஆட்சியாளர் கலந்து கொண்ட முதல் சுதந்திர தினக் கொண்டாட்டம்!

248
0
SHARE
Ad
சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் மாமன்னர், பிரதமர் அன்வார் இப்ராகிம்,

புத்ரா ஜெயா : மலேசியாவின் சுதந்திர தினம் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. புத்ரா ஜெயாவில் நடைபெற்ற அணிவகுப்பில் மாமன்னர் தனது துணைவியாருடன் கலந்து கொண்டார்.

ஜோகூர் ஆட்சியாளரான மாமன்னர் 17-வது மாமன்னராக பதவி ஏற்றுக் கொண்ட பின்னர் கலந்து கொள்ளும் முதல் சுதந்திர தினக் கொண்டாட்டமாக இன்றையக் கொண்டாட்டம் அமைந்தது.

சுதந்திரத் தினக் கொண்டாட்டத்திற்கு மாமன்னர் சுல்தான் இப்ராகிம் தனது காரை தானே சொந்தமாக ஓட்டி வந்தார். காரில் அவருக்கு அருகில் அவரின் துணைவியார் அமர்ந்திருந்தார்.

#TamilSchoolmychoice

இந்தக் கொண்டாட்டத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமும் அவரின் துணைவியார் டத்தின்ஸ்ரீ வான் அசிசாவும் கலந்து கொண்டார்.